LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னாரில் முன்னெடுக்கப்பெற்ற ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி’ வழங்கும் நிகழ்வு

Share

மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

(12-05-2026)

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாளான 12ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று(12) மன்னாரில் நினைவு அனுஷ்டிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் 12ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை (1-05-20262) காலை 10.30 மணியளவில் இடம் பெற்றது.

இதன் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு அங்கிருந்தவர்கள் உட்பட வீதியில் சென்றவர்களுக்கும் கஞ்சி வழங்கப்பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக வருடாந்தம் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஈழத்தமிழர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அதே போன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி அங்குள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள் நினைவேந்தல் அன்று செவ்வாய்க்கிழமை (12) மன்னாரில் முன்னெடுக்கப்பட்டது.