LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் நகரில் ‘வெளிநாட்டு உயர்கல்வி வழிகாட்டல் மையம்’ வைபவரீதியாக ஆரம்பிக்கப்பெற்றது!

Share

வெளிநாடுகளில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் இளைஞர், யுவதிகளுக்கான வழிகாட்டல் மையமான இன்சிவ் குளோபல் பிரைவேட் நிறுவனம் மன்னாரில் நேற்ற 16-06-2026 அன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் தொலைத்தொடர்பு நிலையத்திற்கு (Telecom) அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், வெளிநாட்டு உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவது, கல்வி பயிலும் போதே வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளுதல், தங்குமிட வசதிகள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயற்பட்டு வரும் இந்த நிறுவனம், தற்போது தனது சேவையை மன்னார் மாவட்டத்திலும் விரிவுபடுத்தியுள்ளது.

குறித்த நிகழ்வில் நிறுவனத்தின் இயக்குனர் மொலினி ஹரீந்திரன், மத குருமார்கள், பணியாளர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

வெளிநாடுகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு இந்த மையம் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.