LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த மேன்முறையீட்டு வழக்கு விசாரணையிலிருந்து இரண்டாவது நீதியரசரும் விலகினார்!

Share

அமைச்சர் பதவியின் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்திய குற்றவாளியான ரிஷாட் பதியுதீனுக்கு இந்த நீதியரசர்களின் விலகல் சாதகமாக அமையுமா என கேள்வி எழுப்பியுள்ள அதிகாரிகள்!

(27-04-2026)

மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த மேன்முறையீட்டு வழக்கு விசாரணையிலிருந்து இரண்டாவது நீதியரசரும் விலகியைத் தொடர்ந்து
அமைச்சர் பதவியின் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்திய குற்றவாளியான ரிஷாட் பதியுதீனுக்கு இந்த நீதியரசர்களின் விலகல் சாதகமாக அமையுமா என கேள்வி எழுப்பியுள்ள பல திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் நீதி அமைச்சு இவற்றைக் கவனிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுப்றறி கூறப்படுவதாவது:!

வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் உள்ள காடுகளை அழித்து மீள்குடியேற்றம் செய்தமைக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதில் இருந்து உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் 27ம் அன்று திங்கட்கிழமை விலகியுள்ளார்.

பிரச்சனைக்குரிய முன்னாள் அமைச்சரான ரிஷாட் பதியுதீனால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீடு, 27ம் திகதி திங்கட்கிழமை அன்று (27) ஏ.எச்.எம்.டி. நவாஸ், சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மனு விசாரணையில் இருந்து தான் விலகுவதாக நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தெரிவித்தார்.

இதற்கமைய, இந்த மேன்முறையீட்டு மனுவை வேறு ஒரு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.

வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகிலுள்ள காடுகளை அழித்து அங்கு மக்களை குடியேற்றியமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சுற்றுச்சூழல் நீதி மையம் 2015ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதி மன்றத்தில் நீதிப்பேராணை மனு (Writ) மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவை விசாரித்து தீர்ப்பளித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த பகுதிகளில் காடுகளை அழித்தமைக்கு முன்னாள் அமைச்சரே பொறுப்புக்கூற வேண்டும் என்றும், அதற்கமைய மீண்டும் காடுகளை வளர்ப்பதற்கான செலவை அவர் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதன்படி, மீண்டும் காடுகளை வளர்ப்பதற்காக முன்னாள் அமைச்சர் சுமார் 106 கோடி ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும் என வனப் பாதுகாப்புத் திணைக்களம் கணக்கிட்டிருந்தது.

இந்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது எனவும், அதனை ரத்து செய்யுமாறு கோரியுமே ரிஷாட் பதியுதீன் உயர்நீதிமன்றத்தில் இந்த மேன் முறையீட்டைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு விசாரணையில் இருந்த நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் ஏற்கனவே விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.