LOADING

Type to search

சினிமா

மாரி செல்வராஜின் “மஞ்சணத்தி” படத்தின் படப்பிடிப்பை இளையராஜா தொடங்கி வைத்தார்

Share

மாரி செல்வராஜ் இயக்கத்தில் பிரியங்கா மோகன், கயாடு லோகர், கதிர் நடிக்கும் ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பை இளையராஜா தொடங்கி வைத்தார். பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள மாரி செல்வராஜ், தற்போது தனது ஆறாவது படைப்பாக ‘மஞ்சணத்தி’யை இயக்க உள்ளார். இந்த படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, இளையராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார். மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணி முதல் முறையாக இணைவதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘மஞ்சணத்தி’ திரைப்படம், மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ‘வாழை’ படத்தில் இடம்பெற்ற சிவநைந்தன் கதாபாத்திரத்தின் பதின்பருவம் மற்றும் இளமை கால வாழ்க்கையை மையமாக கொண்டு கதை நகரும் என கூறப்படுகிறது. தற்போது, மாரி செல்வராஜ் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான நவ்வி ஸ்டூடியோஸ் மூலம் மஞ்சணத்தி என்கிற திரைப்படத்தை இயக்குகிறார். கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த நிலையில், ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இளையராஜா – மாரி செல்வராஜ் இணையும் முதல் படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பை தேனியில் இளையராஜா கிளாப் போர்டு அடித்து தொடங்கி வைத்தார்.