LOADING

Type to search

சினிமா

முதல்-அமைச்சர் விஜய் “சிக்மா” திரைப்படத்தை பார்க்க வேண்டுமென சந்தீப் கிஷன் கோரிக்கை வைத்துள்ளார்

Share

முதல்-அமைச்சர் விஜய் “சிக்மா” திரைப்படத்தை பார்க்க வேண்டுமென நடிகர் சந்தீப் கிஷன் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் பரியா அப்துல்லா நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன், ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கேத்ரின் தெரசா ஒரு துள்ளலான பாடலில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றுகிறார். இந்த படம் வருகிற 2ந் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், இந்த படத்திலிருந்து ‘சிக்மா ஸ்டைல்’, ‘அய்யய்யோ அம்மாடி’, ‘ரேஜ் ஆப் சிக்மா’, ‘சுலோச்சனா’ ஆகிய பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக ‘சுலோச்சனா’ பாடலில் சிறப்புத் தோற்றத்தில் கேத்ரின் தெரசா நடனமாடியுள்ளார்.