LOADING

Type to search

சினிமா

மோகன்லாலின் “அதிமனோகரம்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது

Share

நடிகர் மோகன்லால் நடிக்கும் ‘அதிமனோகரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இயக்குநர் சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால் ‘ஹருதயப்பூர்வம்’ படத்தில் நடித்திருந்தார். அப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று ரூ. 80 கோடி வரை வசூலித்தது. ‘திரிஷ்யம் 3’ படம் பாக்ஸ் ஆபிசில் ரூ 320 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. ‘துடரும்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்துள்ள ‘அதிமனோகரம்’ படம் அவரது 366ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘அதிமனோகரம்’ படத்தில் மோகன்லால், ஐயப்ப பக்தி மிகுந்த காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் சில காட்சிகளை சபரிமலையில் படமாக்குவதற்கு தேவசம் போர்டு சார்பில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இது பக்தர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரள தேவசம் போர்டு ஆன்மிகப் படங்களுக்கு மட்டும் அனுமதி என்றும் மற்ற படங்களுக்கு அனுமதியில்லை என்றதால் ‘அதிமனோகரம்’ படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் டி.எஸ். லவ்லஜன் எனும் காவல்துறை அதிகாரியாக மோகன்லால் நடித்துள்ளார். ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். இந்த நிலையில், ‘அதிமனோகரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.