LOADING

Type to search

சினிமா

மோகன்லால் நடிக்கும் புதிய படம் “ஆப்ரேஷன் கங்கா”

Share

இயக்குனர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க உள்ள புதிய படத்திற்கு “ஆப்ரேஷன் கங்கா” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘L367’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணு மோகன், உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான ‘மேப்பாடியான்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்திற்காக அவருக்கு சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து ‘கத இன்னுவரே’ திரைப்படத்தை இயக்கிய அவர், தற்போது மோகன்லாலை வைத்து ‘எல்367’ படத்தை இயக்குகிறார். ‘எல்367’ படத்தின் கதைக்களம் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாக விஷ்ணு மோகன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதேசமயம், இது வழக்கமான ராணுவ பின்னணியிலான திரைப்படம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

மோகன்லால் நடிப்பில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். அந்த வகையில், தற்போது இந்த படத்திற்கு “ஆப்ரேஷன் கங்கா” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.