யாழ்ப்பாணத்தில் ஒரு சிறுவனின் மூத்த சகோதரனை பழிவாங்கும் நோக்கில் சிறுவனின் ஆடைகளை களைந்து தாக்குதலும் நடத்தி, காணொளி பதிவு செய்தவர் பொலிசாரால் கைது!
Share
யாழ்ப்பாணத்தில், 17 வயதுச் சிறுவன் ஒருவனின் ஆடைகளை களைந்து, அவன்மீது தாக்குதல் நடாத்தி, அதனை காணொளியாக பதிவு செய்து வேறு நபர்களுக்கு அனுப்பிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை அதனுடன் தொடர்புடைய இன்னொருவர் தலைமறைவாகியுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவனின் அண்ணாவை பழிவாங்கும் முகமாகவே இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இதேவேளை மற்றைய சந்தேகநபரை தேடும் பணிகளில் சுன்னாகம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.















