LOADING

Type to search

கனடா அரசியல்

“யூலை 1983 சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவைப் போற்றுவதும், உரிமைகள் பாதுகாக்கப்படுவதும் அனைவரின் பொறுப்பாகும்”

Share

கருப்பு ஜூலையின் 43வது ஆண்டு நினைவு கூர்தலை முன்னிட்டு கனடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரிஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பு

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கருப்பு ஜூலை இனவெறி வன்முறையின் 43வது ஆண்டு நினைவை முன்னிட்டு, கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் (Minister of Public Safety) ஹரி ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், கருப்பு ஜூலை என்பது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கொடூரமான இனவெறி வன்முறை என்றும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்து, சொத்துக்களை இழந்து, தாயகத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கருப்பு ஜூலை தமிழர் சமூகத்தின் வரலாற்றில் அழியாத வடுவாக இருந்தாலும், நீதியும், பொறுப்புக்கூறலும், நல்லிணக்கமும் நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் நினைவைப் போற்றுவதும், மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் எதிர்காலத்தை உருவாக்குவதும் அனைவரின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

கருப்பு ஜூலை மறக்கப்படக்கூடாத வரலாறு; அது மீண்டும் ஒருபோதும் நிகழக்கூடாது என்ற செய்தியுடன் தனது நினைவு அறிக்கையை கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ளார்.