LOADING

Type to search

சினிமா

யோகி பாபு நடித்த ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் ‘பொறு மனமே பொறு’ பாடல் வெளியானது

Share

யோகி பாபுவின் 300-வது படம்மான ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் ‘பொறு மனமே பொறு’ பாடல் வெளியானது.  தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான யோகி பாபு பல திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது அவரது 300 வது படமாக ‘அர்ஜுனன் பேர் பத்து’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் அவருக்கு திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் மெலோடி பாடலான ‘பொறு மனமே பொறு’ என்ற பாடல் வரி வெளியாகி இணையதளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லாகரி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்பாடல், அவசர உலகத்தில் மனித மனம் அமைதி மற்றும் பொறுமையைப் போற்றும் வகையில் அமைந்துள்ளது. இந்த பாடலுக்கு டி. இமான் தனது வழக்கமான முத்திரையுடன், பல வகையான கருவிகளைப் பயன்படுத்தி மன அமைதி உணர்வைத் தரும் வகையில் இசையமைத்துள்ளார். பிரபல பாடலாசிரியர் கார்த்திக் நேதா, “உணர்ச்சி வேகத்தாலே என்றும் எதுவும் மாறிடாதே, அமைதி காப்பதாலே ஒன்றும் அறங்கள் மாய்ந்திடாதே” மற்றும் “மாற்றம் ஒன்றுதானே இயற்கை உண்மை இங்கே” என்று தத்துவ வரிகளை எழுதியுள்ளார். இப்பாடலை ஹிருதய் தபஸ்வி மற்றும் சௌந்தர்யா பாலா நந்தகுமார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.