LOADING

Type to search

சினிமா

ரஜினிகாந்த நடித்துள்ள “ஜெயிலர் 2” படம் அக்டோபர் 15ம் தேதி வெளியாகிறது

Share

ரஜினிகாந்த நடித்துள்ள “ஜெயிலர் 2” படம் அக்டோபர் 15ம் தேதி வெளியாகிறது. நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில், நடிகர் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், மிர்னா மேனன், விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் போன்றோரும் நடித்துள்ளனர். ‘ஜெயிலர்’ முதல் பாகத்திற்கு இசையமைத்த அனிருத்தே அதன் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழகத்தில் முதல் ஒரு வாரத்துக்கு காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி இருக்கும் நிலையில் முன்பதிவு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. முன்பதிவில் மட்டும் இதுவரை ரூ.30 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடக்கூடாது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு கொடுத்துள்ளது. அதில் பெரும் பொருட்செலவில் படம் எடுக்கப்பட்டுள்ளதால் அது இணையத்தில் வெளியாகும் பட்சத்தில் பெருத்த நஷ்டம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ‘ஜெயிலர் 2’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்துள்ளது.