LOADING

Type to search

உலக அரசியல்

ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – தளபதி மற்றும் வீரர்கள் உயிரிழப்பு

Share

நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பிராந்தியமான பெனிஷேக் பகுதியில் ஒரு ராணுவ முகாம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் இந்த முகாமில் மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர் சுதாரித்துக்கொண்டு ராணுவ வீரர்கள் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். பயங்கரமான இந்த மோதலில் ஒரு ராணுவ தளபதி மரணம் அடைந்தார். அதேபோல பல ராணுவ வீரர்களும் இறந்தனர். ராணுவ செய்தி தொடர்பாளர் கூறும்போது ’நமது நாட்டை காப்பதற்கான போரில் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ஓசேனி பிரைமா இறந்தார். உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் தியாகத்தை அரசாங்கம் மறக்காது. ஒனோஜா பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது’ என்றார்.