ராம் சரணின் “பெத்தி” படத்தின் முன்னோட்டம் 18ம் தேதி வெளியீடு
Share
இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பெத்தி’ படத்தில் ராம் சரண் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிக செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சிறப்பு பாடல் ஒன்றிற்காக ராம்சரண் உடன் ஒரு பாடலுக்கு நடனமாடிள்ளார் சுருதிஹாசன். உள்ளூரில் விளையாட்டு கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்திற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி செய்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் ரசிகர்கள், “இந்தியாவின் ஹல்க்” எனக் கூறினார்கள். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான சிக்கிரி பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. இந்நிலையில், ராம் சரண், ஜான்வி கபூர் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வரும் 18ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் ஜூன் 4ம் தேதி வெளியாகவுள்ளது.















