ராம் பொத்தினேனி இயக்கி நடிக்கும் படத்தில் சம்யுக்தா மேனன்?
Share
நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் ராம் போத்தினேனி இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குவதோடு கதாநாயகனாகவும் அவர் நடிப்பதால் இந்த படம் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்காக பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இறுதியாக சம்யுக்தா மேனனையே படக்குழு தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. கதையை கேட்ட சம்யுக்தா மேனனுக்கு அது மிகவும் பிடித்து போனதால், உடனடியாக படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அது உண்மையாகும் பட்சத்தில் ராம் பொத்தினேனி மற்றும் சம்யுக்தா மேனன் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாக இருக்கும்.















