“லட்சுமிகாந்தன் கொலை வழக்கு” படம் ஜூலை 10ம் தேதி வெளியாகிறது
Share
தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வெற்றி, பிரிகிடா நடிக்கும் ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ படம் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ளது. தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு திரைப்படத்தை 2எம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ படத்தின் கதாபாத்திர அறிமுக காணொளியை படக்குழு வெளியிட்டது. அதில், வெற்றி அறிவுமதி என்ற கைதியாகவும், ரங்கராஜ் பாண்டே சிவானந்தம் என்ற சிறை அதிகாரியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டனர். பிரிகிடா சாகா மல்லிகாவாகவும், சரவணன் சற்குணமாகவும், லொள்ளு சபா மாறன் மூர்த்தியாகவும், லிசி ஆண்டனி சூடாமணியாகவும், சுப்ரமணியம் சிவா தர்மனாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பெரியாரிய சிந்தனையாளரான சுப. வீரபாண்டியன், கதைக்கு வலுவான சித்தாந்த ஆழத்தை சேர்க்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்திற்கு எம்.வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரி மாதத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ளது.
















