LOADING

Type to search

சினிமா

‘லெனின் பாண்டியன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Share

 நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் தயாரிப்பாளராகவும், தொழில் அதிபராகவும் இருக்கிறார். இவரது முதல் மகன் துஷ்யந்த், ‘ஜூனியர் சிவாஜி’ என்ற பெயரில் சில படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ராம்குமாரின் 2-வது மகன் தர்ஷன் கணேசனும் சினிமாவுக்கு வருகிறார். சிவாஜிகணேசனின் இளைய மகன் பிரபுவும், பேரன் விக்ரம் பிரபுவும் முன்னணி நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரித்து, டி.டி.பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘லெனின் பாண்டியன்’ படத்தில் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கங்கை அமரன், ரோஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா இப்படத்தின் மூலம் தமிழில் மறு பிரவேசம் கொடுத்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. இந்த முன்னோட்டத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.