LOADING

Type to search

சினிமா

லோகேஷ் கனகராஜின் “பென்ஸ்” படத்தில் ரவி மோகன் இணைந்தார்

Share

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் தயாரிப்பில் பென்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார். இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ‘ரெமோ’, ‘சுல்தான்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். ‘பென்ஸ்’ திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது. இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். வில்லன் கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார். ‘பென்ஸ்’ திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். மேலும் இவர் ‘கைதி 2’ மற்றும் ‘விக்ரம் 2’ படத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. நடிகை சம்யுக்தாவும் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், எல்சியூ எனப்படும் லோகேஷ் கனகராஜ் திரைப்பட கதைகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் படமாகவே ‘பென்ஸ்’ உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ‘லியோ’ படப்பிடிப்பு நடைபெற்ற செட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘பென்ஸ்’ படத்தில் நடிகர் ரவி மோகன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.