LOADING

Type to search

சினிமா

விஜய் சேதுபதி ஒரு எரிமலை “டிரெ​யின்” பட விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசினார்

Share

விஜய் சேதுபதி ஒரு எரிமலை  “டிரெ​யின்” பட விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசினார்.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் மிஷ்கின் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை சுருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், நாசர், மற்றும் நடிகர் நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷ்ன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்திருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. ‘டிரெயின்’ திரைப்படம், ஒரே இரவில் ரெயிலில் நடைபெறும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டார்க் திரில்லர் படமாகும். விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. ‘டிரெயின்’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழா​வில் மிஷ்கின் பேசும்​போது, “ நீண்ட நாளுக்​குப் பிறகு தாணு சாரை சந்​தித்து படம் பண்​ணலாம் என்​றேன். விஜய் சேதுப​தியை வைத்​துப் பண்ணலாம் என்​றார். விஜய் சேதுபதி என்​னுடன் ஒரு படத்​தில் 2 நாட்​கள் நடித்​தார். பிறகு 10 வருடத்​துக்​குப் பிறகு இணைந்துள்ளோம். முன்பு அவர் வாய்ப்பு கேட்ட போது நான் சரியான பதிலளிக்​க​வில்​லை. பிறகு அவர் பெரிய நடிக​ராக வளர்ந்து விட்​டார். என்​னுடைய ‘சைக்​கோ’ படம் பாத்​து​விட்டு என்னைக் கட்​டிப் பிடித்து முத்​தம் கொடுத்​தார். அவரை மிகச் சிறந்த மனித​னாகப் பார்த்​தேன்.

இந்​தக் கதையை விஜய் சேதுப​திக்​காகப் பார்த்​துப் பார்த்து எழுதினேன். கதை​யில், வாழ்க்கை முடிந்​து​விட்​டது என நினைத்துக் கொண்​டிருக்​கிற கதா​பாத்​திரம் அவருக்​கு. இந்​தப் படத்தை விஜய் சேதுப​தி​யைத் தவிர வேறு யாருமே நடித்திருக்க முடி​யாது. கமல் சார் கூட பண்​ணியிருக்க முடி​யாது. விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி. என் படம் பற்றி நான் பெருமையாகப் பேசவர​வில்​லை. படம் நன்​றாக இருந்​தால்​தான் ஓடும் என்​பது தெரி​யும். விஜய் சேதுப​தி​யின்​ நடிப்​பை என்​னால்​ மறக்​கவே முடி​யாது” என்​றார்​.