LOADING

Type to search

சினிமா

விஷ்ணு விஷாலின் “கட்டா குஸ்தி 2” படம் ரூ55 கோடி வசூலானது

Share

விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ரூ55 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், இயக்குநர் செல்லா அய்யாவுடன் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி 2’. கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து, அதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. விஷ்ணு விஷாலுடன் மீண்டும் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம், காமெடி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ளது. கடந்த ஜூலை 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கட்டா குஸ்தி 2’, முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நேர்மறையான விமர்சனங்களும், குடும்ப ரசிகர்களின் ஆதரவும் கிடைத்துள்ளதால், இரண்டாவது வாரத்திலும் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து, படத்தின் திரையிடல் 450-க்கும் மேற்பட்ட திரைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஒரு பிஎம்டபிள்யூ சொகுசு காரையும், இயக்குநர் செல்லா அய்யாவுக்கு 10 சவரன் தங்கச் சங்கிலியையும் பரிசாக வழங்கியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் படக்குழுவினருக்கு 40 கிராம் வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கினார். விஷ்ணு விஷால் இயக்குநர் செல்லா அய்யாவுக்கு கார் பரிசாக வழங்கியுள்ளார். ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் உலகளவில் ரூ55 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.