LOADING

Type to search

இந்திய அரசியல்

ஶ்ரீமந் நாராயணா ஶ்ரீலஹரி கிருஷ்னா அவர்களின் 57வது கல்கி ஜெயந்தி விழா

Share

ஶ்ரீமந் நாராயணா ஶ்ரீலஹரி கிருஷ்ணா அவர்களின் 57வது கல்கி ஜெயந்தி விழா திருநெல்வேலி  மாவட்டம்  முக்கூடலில் உள்ள மனுஜோதி ஆசிரமம் சத்திய நகரத்தில் கோலாகலமாக தொடங்கியது. இறைவன் மனிதனுக்கு கொடுத்த எல்லையைக் கடந்து சந்திரனுக்குச் சென்றபோது, இறைவன் இந்த பூமியில் இருப்பதாக காண்பித்த அந்த நாள்தான் கல்கி ஜெயந்தி தினமாக இங்கு கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஜூலை 21-ம் தேதியோடு 57 ஆண்டுகள் நிறைவடைகிறது. தேவாசீர் லாறி அவர்களின் குமாரர்கள் திருவாளர்களான டி  பால் உப்பாஸ் நவராஜா லாறி மற்றும் டி .லியோ பால் கொலம்பஸ் லாறி இருவரும் கொடியேற்றி விழாவினை துவக்கி வைத்தனர். 1988-ம் ஆண்டு கல்கி ஜெயந்தி விழாவின் துவக்கத்தில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அன்புக் கொடியினை தமது கரங்களில் பிடித்து, மனுஜோதி ஆசிரமத்தைச் சுற்றி ஊர்வலமாக வந்தார் என்பதனை நினைவு கூர்ந்தனர். ஜூலை 1-ம் தேதி முதல் விழாவின் ஏற்பாடுகள் மற்றும் பணிகள் துவங்கியது. இந்த கொடியேற்று விழாவில் தமிழகம், ஆந்திரா, மலேசியா, அமெரிக்கா, பர்மா ஆகிய நாடுகளை சேர்ந்த ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் பலரும், மனுஜோதி ஆசிரம பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர். அனைத்து வேதங்களின் ஆராய்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் சீடர்களின் சொற்பொழிவுகள், பெண்கள் மாநாடு மற்றும் சிறுவர் சிறுமியர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடவுள் ஒருவரே என்ற கொள்கையை உடைய மக்களை அன்புடன் அழைக்கின்றது மனுஜோதி ஆசிரமம். நம்மைப் படைத்த ஏக இறைவனுக்கு நன்றி செலுத்துவதை உலகிற்கு கற்பிக்கும்  ஒரு பல்கலைக்கழகம்தான் மனுஜோதி ஆசிரமம்.