LOADING

Type to search

சினிமா

“ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” படத்தின் பின்னணி குரல் பணிகளை விஜய் சேதுபதி. நிறைவு செய்தார்

Share

இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ படம் பெரிய செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், “அர்ஜுன் ரெட்டி”, “அனிமல்” போன்ற படங்களில் தனது அதிரடியான இசையால் பாராட்டுகளை பெற்றவர், இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகை சார்மி கவுர் தயாரிக்கும் இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் இணைந்து தபு, சம்யுக்தா மேனன், துனியா விஜய், நிவேதா தாமஸ், பிரம்மாஜி, விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.  படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ படத்தின் முன்னோட்டம் வரும் 8ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படகுழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி இந்த படத்திற்கான பின்னணி குரல் பணிகளை நிறைவு செய்துள்ளார்.