LOADING

Type to search

இந்திய அரசியல்

2040-ம் ஆண்டில் இந்தியர்களை நிலவுக்கு அனுப்ப இலக்கு – இஸ்ரோ தலைவர் தகவல்

Share

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) குறைந்த செலவிலான திட்டங்களை தொடங்குவது முதல் நிலவின் மேற்பரப்பில் வரலாற்று சிறப்புமிக்க மைல்கற்களை எட்டுவது வரை, உலகளாவிய விண்வெளி ஆய்வில் இந்தியா தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. மனிதனை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்துவரும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்திற்காக 3 ஆள் இல்லாத ராக்கெட்டை அனுப்பி சோதனை செய்யப்பட உள்ளது. அதில் முதல் ராக்கெட் இந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட உள்ளது. நிலவுக்கு இந்தியர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவதில் இஸ்ரோ ஆர்வமாக உள்ளது. வருகிற 2040-ம் ஆண்டுக்கான இந்த தொலைநோக்குப் பார்வை, தன்னம்பிக்கை, அறிவியல் முன்னேற்றம் மற்றும் புதுமைகளுக்கான நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இவை விண்வெளியில் இந்தியாவின் எதிர்கால பங்களிப்பை மேம்படுத்தும். இந்தியா உலகின் முன்னணி விண்வெளி வல்லரசுகளின் வரிசையில் இணைய தயாராக உள்ளது. மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.