LOADING

Type to search

இந்திய அரசியல்

60 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் புரட்சி ஏற்பட்டுள்ளது – ஆதவ் அர்ஜுனா பேட்டி

Share

தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில், 85.10 சதவிகித வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள்  காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தவெக 110 தொகுதிகளுக்கு மேல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதன் தலைவர் விஜய் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார். இந்தநிலையில் தவெகவின் வில்லிவாக்கம் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

60 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் புரட்சி ஏற்பட்டுள்ளது. இளைஞர்களும் பெண்களும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளனர். மன்னராட்சிக்கு முடிவு எழுதப்பட்ட நாள் இன்று. விஜய் மீது கடுமையான அவதூறுகள் பரப்பப்பட்டன. திமுக அரசே எதிர்த்து நின்றது என்றார்.