LOADING

Type to search

உலக அரசியல்

மெக்சிகோவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

Share

மத்திய மெக்சிகோவின் பூப்லா – ஒக்ஸாகா தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அதே சாலையின் எதிரே சிமெண்ட் லோரி ஒன்று வந்துகொண்டிருந்தது. லாரியானது மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிர்பாராத விதாம எதிரே வந்த பஸ் மீது மோதியது. இதனையடுத்து மற்றொரு வேன் மீதும் நேருக்கு நேர் மோதியது. இந்த மோதல்களுக்குப் பிறகு லோரி ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் அதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மெக்சிகோவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.