LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னாரில் இலங்கை வங்கி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை – பொது மக்கள் பாதிப்பு

Share

29.05.2025

இலங்கை வங்கி மன்னார் கிளை ஊழியர்கள் 29ம் திகத அன்றைய தினம் வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் அடையாள தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

அரச வங்கிகளின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அன்று 29ம் திகதி காலை 10.30 தொடக்கம் வங்கி கிளை களை மூடி கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ளனர்

குறித்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல்வேறு சேவைகள் நிமித்த வங்கிக்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர் கொண்டதுடன் வங்கி செயற்பாடுகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் பல தூர இடங்களில் இருந்து வருகை தந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.