LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு

Share

உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 209வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனிடையே, கடந்த 1ம் தேதி உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷிய போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. இதனால், இரு தரப்பு மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா அதிகாலை தாக்குதல் நடத்தியது. டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 44 படுகாயமடைந்தனர்.