LOADING

Type to search

உலக அரசியல்

1,600 பிளாஸ்டிக் பாட்டில்களை வடகொரியாவுக்கு அனுப்பிய 6 அமெரிக்கர்கள் கைது

Share

வடகொரியாவின் குவாங்வா தீவு கடற்பகுதியில் கடலோர காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சுமார் 1,600 பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்து சென்றன. அந்த பிளாஸ்டிக் பாட்டிலில் அரிசி, பைபிள் போன்ற பொருட்கள் இருந்தன. இதனையடுத்து குவாங்வா தீவு கடற்கரைக்கு போலீசார் சென்று பார்த்தனர். அப்போது அமெரிக்காவைச் சேர்ந்த 6 பேர் இந்த பிளாஸ்டிக் பாட்டில்களை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தென் கொரியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.