LOADING

Type to search

உலக அரசியல்

காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் – டிரம்ப் அறிவிப்பு

Share

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில்தான், 60 நாள் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையேயான போரில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில், ”60 நாள் காசா போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது” என டிரம்ப் கூறியிருப்பது முழு அளவிலான போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான கதவுகளை திறந்துவிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.