LOADING

Type to search

உலக அரசியல்

காசா மீதான தாக்குதல் முடிவுக்கு வருமா?.. டிரம்பை சந்திக்கிறார் இஸ்ரேல் பிரதமர்

Share

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஜூலை 7 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் வரவேற்க திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்க அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார். காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் செய்து, மீதமுள்ள பணயக்கைதிகளை திருப்பி அனுப்புமாறு டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி இருந்தார்.

முன்னதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தனது அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்காக அடுத்த வாரம் வாஷிங்டன் செல்ல இருப்பதாகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அதிகாரிகளை சந்திக்க இருப்பதாகவும் கூறினார். சந்திப்பின் நோக்கம் பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் விளக்கப்படவில்லை. இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர இரு தரப்பும் தயாராக இருப்பதாக டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளதால், அதுகுறித்து அந்த சந்திப்பில் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல போருக்குப் பிந்தைய ஈரான் நிலவரம் குறித்தும் அவர்கள் விவாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.