இனிவரும் மூன்றாண்டுகளில் மத்திய வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளில் 25 பில்லியன்களை குறைப்பதற்கு தீர்மானித்துள்ள மார்க் கார்னியின் அரசு
Share
நிதி நெருக்கடிகளை சமாளிக்க கனடிய அரசு அரச அதிகாரிகள் பலரை பணியிலிருந்து நீக்குவது மற்றும் வெளி அமைப்புக்களுக்கான நிதி வழங்கலைத் கட்டுப்படுத்துவது போன்ற அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்
அடுத்த மூன்றாண்டுகளில் கனடிய மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடுகளில் 25 பில்லியன் டாலர்களை குறைப்பதற்கு மார்க் கார்னியின் அரசு தீர்மானித்துள்ளதாக ஒட்டாவா பாராளுமன்ற வளாகத்திலிருந்து கசிந்தள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி நிதி நெருக்கடிகளை சமாளிக்க கனடிய அரசு அதன் மத்திய அரசின் கீழ பணியாற்றும் அதிகாரிகள் தரத்தில் உள்ளவர்களில் பலரை பணியிலிருந்து நீக்குவது மற்றும் வெளி அமைப்புக்களுக்கான நிதி வழங்கலைத் கட்டுப்படுத்துவது போன்ற அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் மேற்படி தகவல்களிலிருந்து அறியவந்துள்ளது.
பல காரணங்களால் அரசாங்க மட்டத்தில் இடம் பெறும் செலவு மதிப்பாய்வின் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மார்க் கார்னி மற்றும் அமைச்சர்சகள் வாக்குறுதியளித்ததை விட பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கம் எவ்வாறு இரு மடங்கு சேமிப்புக்களை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை தெரிந்து கொண்ட கனடியர்கள் பலரும் தொழில் நிறுவனங்களும் தமது அதிருப்த்தியை வெளியிட்டுள்ளனர்.
ஒட்டாவாவின் செலவு அதிகரிப்பானது கனேடிய இராணுவத்தை நோக்கியதாக உள்ளதால் எந்தெந்த மத்திய அரசின் செலவீனங்களை கட்டுப்படுத்தலாம் என்பதில் மார்க் கார்னியின் அரசும் நிதி அமைச்சகமும் திணிடாடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய அரசிற்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக அமர்த்தப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி இந்த ‘வெட்டுக்கள்’ தொடர்பாக கருத்துக்களை வெளியிடுகையில் மத்திய அரசின் ஆடீலாசனைகளின் படி, வெட்டுக்கள் மற்றும் வேலை இழப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என்பதையும் இது காட்டுகிறது அஎன்றும் மேலும் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான வழிகளில் “அதிக முதலீடு செய்ய” முளையும் அரசாங்க நடவடிக்கைகளின் பிரகாரம் “குறைவாக செலவழிக்க” மார்க் கார்னி அரசாங்கத்தின் அமைச்சர் பலர் பிரதமருக்கு உறுதியளித்துள்ளார்கள் என்றும் நம்பப்படுகின்றது.
9ம் திகதி புதன்கிழமை ஒரு நேர்காணலில், கனடிய பாராளுமன்ற வரவு செலவுத் திட்டத்தின் பொறுப்பதிகாரி யவ்ஸ் கிரோக்ஸ், கருத்துத் தெரிவிக்கையில் “நிதி விரயத்தை தடுத்து நிதியை சேமிக்கும் பயிற்சியின் பெரிய நோக்கம் என்பது நிச்சயம் செய்து முடிக்கப் கூடியது” என்று கூறினார், ஆனால் விளைவுகள் . “அரசு ஊழியர்களுக்கும் கனேடியர்களுக்கும் எவ்வளவு வேதனையை ஏற்படுத்தும் என்பது அரசாங்கம் உணர்ந்து கொண்ட ஒரு விஷயம்” என்றும் அவர் கூறினார்.
கனடிய மத்திய அரசின் பொது சேவையின் அளவை குறைப்பதற்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமர் மார்க் கார்னி உறுதியாகத் தெரிவித்திருந்த போதும், ஒட்டாவா மாநகர வணிக நிறுவனங்கள் மற்றுமு; , அரசாங்கம் அல்லாத அமைப்புகள் மற்றும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் மற்றவர்கள் போன்ற வெளிப்புற அமைப்புகளுக்கு மானியங்களையும் பங்களிப்புகளையும் குறைக்கும் வரை, மக்களுக்கு சோதனைகளை ஏற்படுத்துவது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாததாக இருக்கும் ”என்று ஜிரோக்ஸ் தெரிவித்துள்ளார்.அத்துடன் இரண்டு வகையான நிதி வெட்டுக்களும் இணைந்து அதன் பாதிப்பை அதிகமாக்கும் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறிருக்க, கடந்த மாதம், இந்த ஆண்டு பாதுகாப்புக்காக கூடுதலாக 9 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்ப்ட்ட பின்னர், பிரதமர் மார்க் கார்னி வழங்கிய ஒரு புதிய நேட்டோ நாடுகளுக்கான உறுதிமொழியில் கனடாவின் மொத்த உள்நாட்டு வருமானத்தில் 3.5 சதவீதத்திற்கு சமமானதை 2035 க்குள் உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் போன்ற “முக்கிய” இராணுவத்துறையின் தேவைகளுக்காக செலவழிக்க கையெழுத்திட்டார், ஜி.டி.பி-யில் மேலும் 1.5 சதவீதம் ஜி.டி.பி-ஆர்-தொடர்புடைய முதலீட்டில் இராணுவப் பயன்பாடு. அடுத்த தசாப்தத்தில் கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வாறு வளர்கிறது என்பதைப் பொறுத்து, அந்த உறுதிப்பாட்டை பூர்த்தி செய்ய அரசாங்கம் 40 பில்லியன் டாலர்கள் வருடாந்த நிதியை இராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கு வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். .
அதே நேரத்தில், அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கத்தின் செயல்பாட்டு செலவு வரவு செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்துவதாக பிரதமர் மார்க் கார்னி உறுதியளித்துள்ளார், மாகாணங்கள் மற்றும் பல் பராமரிப்பு, குழந்தை பராமரிப்பு மற்றும் பிறப்பு கட்டுப்பாடு மற்றும் நீரிழிவு மருந்துகளுக்கான பொது பாதுகாப்பு போன்ற திட்டங்களுக்கான அரசாங்கத்தின் கொடுப்பனவுகளை குறைக்காமல். வரவிருக்கும் ஆண்டுகளில் மற்ற பகுதிகளிலிருந்து நிதி வளங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் சில அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர் என்றும் அறியப்படுகின்றது
எனினும் 2028-29 காலப்பகுதிக்குள் வருடாந்த சேமிப்புக்கான ஒட்டுமொத்த இலக்கு முழு அரசாங்கத்திலும் சுமார் 25 பில்லியன் டாலர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏப்ரல் 28 தேர்தல் பிரச்சாரத்தின்போது மார்க் கார்னி தலைமையிலான வேட்பாளர்கள் உறுதியளித்ததைப்போன்று கனடாவின் பொருளாதாரத்தை செப்பனிட்டுக் கொள்ளலாம் என மார்க் கார்னியின் அரசாங்கம் நம்புவதாகவும் ஒட்டாவாவிலுள்ள பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள் எனவும் கூறப்படுகின்றது




















