இஸ்ரேல் – சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமல்
Share
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் கடந்த புதன்கிழமை திடீரென இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில், ட்ரூஸ் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பெண்கள், குழந்தைகள் என 300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தெற்கு பகுதியில் குவிக்கப்பட்ட படைகள் மீதும் தாக்குதல்கள் நடந்தன. சிரியாவில் சிறுபான்மையினராக உள்ள ட்ரூஸ் மக்களை பாதுகாப்பதற்காக இந்த தாக்குதல் என இஸ்ரேல் தெரிவித்ததுடன், சிரியாவின் தெற்கு பகுதியில் இருந்து அரசின் படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது. இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த தகவலை துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பாரக் உறுதி செய்துள்ளார்.




















