LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைன் சிறைச்சாலை மீது ரஷியா வான்வழி தாக்குதல் – 17 பேர் உயிரிழப்பு

Share

உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 252வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா அதிரடி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் சப்போரியா மாகாணம் பிலன்கிஸ்கா நகரில் உள்ள சிறைச்சாலை மீது ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தியது. டிரோன்கள் மூலம் சிறைச்சாலை மீது குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் சிறைக்கைதிகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 80 பேர் படுகாயமடைந்தனர்.