LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் முன்னாள் பெண் விடுதலைப் புலிகள் போராளி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Share

யாழ்ப்பாணத்தில் திருமணமாகாத முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து 29ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று உயிர் மாய்த்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிறீஸ்கந்தராசா தவரூபி (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் தனது சகோதரியுடன் வாசித்து வந்துள்ளார். இந்நிலையில் மன விரக்தியில் இன்று மதியம் உணவருந்திய பின்னர் தனக்குத்தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீமூட்டி உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.