“இளைய தலைமுறையினருக்கு திருக்குறள் மீதான தேடலை ஏற்படுத்த கனடாவில் நடைபெறவுள்ள ‘அனைத்துலக திருக்குறள் மாநாடு’ வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு செயற்படுகின்றோம்”
Share
செப்டம்பர் 2025 ல் ரொறன்ரோ பல்கலைக் கழக ஸ்காபுறோ வளாகத்தில் நடைபெறவுள்ள ‘அனைத்துலக திருக்குறள் மாநாடு’ தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்திய கலாநிதி லம்போதரன் தெரிவிப்பு
” கனடாவில் மாத்திரமல்ல உலகின் பல நாடுகளில் வாழும் எம் இளைய தலைமுறையினருக்கு திருக்குறள் மீதான தேடலை ஏற்படுத்த வேண்டும் என்பதோடு திருவள்ளுவர் எமக்காக படைத்தளித்த இந்த உலகப் பொதுநூலின் உள்ளடக்கங்களையும் கருத்துச் செறிவுகளையும் அவர்கள் கற்றுணரவேண்டும் என்பதும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19ம்.

20ம் 21ம் திகதிகளில் கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ரொறன்ரோ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ள ‘அனைத்துலக திருக்குறள் மாநாடு’ வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு கனடாவில் இயங்கிவரும் மாநாட்டுக் குழுவினராகிய நாம் செயற்படுகின்றோம். எனவே கற்றறிந்த பெரியோர்கள்களும் கற்கத் துடிக்கும் இளைய தலைமுறையினரும் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அது சிறப்புற நடைபெற ஒவ்வொருவரும் தங்கள் ஒத்துழைப்பையும் வழங்க வெண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்”
.இவ்வாறு எதிர்வரும் செப்டம்பர் 2025 ல் ரொறன்ரோ பல்கலைக் கழக ஸ்காபுறோ வளாகத்தில் நடைபெறவுள்ள ‘அனைத்துலக திருக்குறள் மாநாடு’ தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்திய கலாநிதி லம்போதரன் உரையாற்றுகையில் மிகுந்த உற்சாகத்தோடு தெரிவித்தார்.
மேற்படி அனைத்துலக திருக்குறள் மாநாடானது. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம். மற்றும் ஆசிய கற்கைகளுக்கான நிறுவனம் மற்றும் ‘ஈகை’ சமூக நிறுவனமும் இணைந்து நடத்தும் வகையில் ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவின் சா ர்பிலும் ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்தின் சார்பிலும் வைத்திய கலாநிதி அங்கு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

மாநாட்டுக் குழுவின் இணைப்பாளரான சிவன் இளங்கோ மற்றும் கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை ஸ்காபுறோ தமிழிசைக் கலாமன்றத்தின் கலாச்சார மண்டபத்தில் புதன்கிழமை 13ம் திகதி மாலை நடத்தினர் நடத்தினர்.
மேற்படி சந்திப்பில் பலரும் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்க்ளைப் பகிர்ந்து கொண்டனர்.




















