ரொறன்ரோ கத்தோலிக்க மக்களின் வருடாந்த பெருவிழா
Share
ரொறன்ரோ தமிழ் கத்தோலிக்க மக்களின் வருடாந்த பெருவிழா, எதிர்வரும் செப்ரம்பர் 14ம் திகதி, நடைபெறவுள்ளது. புதுமைகளின் தாயான புனித வேளாங்கன்னி அன்னை என அறியப்பட்ட, தூய ஆரோக்கிய அன்னையின் வருடாந்த திருவிழா, இவ்வருடமும் வழமைபோன்று மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
ஸ்காபரோவில், பேர்ச்மவுண்ட் மற்றும் டன்போர்த் அவனியூ வீதிகள் சந்திக்கும் இடத்தில், இலக்கம் 131 பேர்ச்மவுண்ட் வீதியில் அமைந்துள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில், மாலை 3:30 மணிக்கு வழிபாடுகள் ஆரம்பமாகும். திருப்பலியைத் தொடர்ந்து, ஆலயத்திற்கு வெளியே திருச்சுரூபப் பவனி மற்றும் அன்னையின் ஆசீர்வாதம் இடம்பெறும். அனைத்து பக்தர்களையும் கலந்துகொண்டு அன்னையின் ஆசிபெற அழைக்கிறோம்.
மேலதிக தொடர்புகளுக்கு: அருட்பணி சாள்ஸ் கொலின்ஸ்: 416-264-6544




















