மிஷ்கின் – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்
Share
தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் தனித்துவமான இயக்குனரான மிஸ்கின் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் பிரவீன் எஸ் விஜய். தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத இந்த படம்,, கோர்ட் ரூம் டிராமாவாக கதைக்களம் இருக்கும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அரு வின்சென்ட் ஒளிப்பதிவில் சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
இந்த படத்தை வேடிக்காரன்பட்டி எஸ் சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சல் தயாரிக்க, அக்ஷய் கேஜ்ரிவால் மற்றும் விவேக் சந்தர் எம் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர். வினோத் சி.ஜே படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்ற, ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் வழங்குகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.




















