மணிப்பூரை அமைதி, வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன் – பிரதமர் மோடி
Share
பிரதமர் மோடி மணிப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 2023ம் ஆண்டு மணிப்பூரில் இனக்கலவரம் ஏற்பட்ட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது அம்மாநிலத்தில் அமைதி திரும்பி வருகிறது. மணிப்பூர் கலவரத்திற்குப்பின் அம்மாநிலத்திற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். மணிப்பூரில் ரூ. 7 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ. 1 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான முடிவு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கி உள்ள மக்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, மணிப்பூரில் வன்முறை நடைபெற்றது மிகவும் துரதிஷ்டவசமானது. இந்திய அரசும், நானும் உங்களுடன் இருக்கிறேன் என்பதை உறுதியளிக்கிறேன். அனைத்து குழுக்களும், அமைப்புகளும் வன்முறையை கைவிட்டு அமைதி வழிக்கு திரும்ப நான் அழைப்பு விடுக்கிறேன். 2014 முதல் மணிப்பூரின் இணைப்பை மேம்படுத்த நான் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறேன். உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா விரைவில் மாறும். அதன் வளர்ச்சி நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் என்பதை நான் உறுதி செய்கிறேன். மணிப்பூரை அமைதி, வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன். கலவரத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்களை சந்தித்து நான் பேசினேன். மணிப்பூர் புதிய விடியலை நோக்கியுள்ளது. மக்கள் அமைதி வழியை தேர்ந்தெடுத்துள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.




















