LOADING

Type to search

சினிமா

காந்தாரா சாப்டர் 1 படத்தின் முன்னோட்டம் – சிவகார்த்திகேயன் வெளியீடு

Share

2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் ‘காந்தாரா’. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘காந்தாரா சாப்டர்1’ உருவாகி உள்ளது. திரைப்படம் அடுத்த மாதம் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் படத்தின் முன்னோட்டம் வரும் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ் முன்னோட்டத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட இருக்கிறார், இந்தி மொழியில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் வெளியிடவுள்ளார். காந்தாராவின் முதல் பாகம் மற்றும் கேஜிஎஃப் 2, சலார் ஆகிய படங்களை தயாரித்த ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனமே காந்தாரா சாப்டர் 1-ஐயும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.