LOADING

Type to search

இலங்கை அரசியல்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் இடம் பெற்ற இரத்ததான முகாம்!

Share

பு.கஜிந்தன்

தமிழர் தாயகம் எங்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரமானது உணர்வு ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில்”உயிர் கொடுத்த உத்தமனுக்காய் உதிரம் கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியத்தால் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரத்ததான முகாமானது செப்டெம்பர் 24ஆம் திகதி மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 3.00 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே அனைத்து தரப்பினரையும் இந்த இரத்ததான முகாமில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.