LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் பிறந்து சிறிது நேரத்தில் உயிரிழந்த இரட்டை குழந்தைகள்!

Share

யாழ்ப்பாணத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்து பிறந்ததுடன் மற்றைய குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நிமலராஜ் சாருமதி தம்பதிகளின் குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குழந்தைகளின் தாயாருக்கு கடந்த 21ஆம் திகதி இரவு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இதன்போது அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தபோது பெண் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டது. ஆண் குழந்தை உயிருடன் பிறந்த நிலையில் 45 நிமிடங்கள் கழித்து உயிரிழந்துள்ளது.

குழந்தைகளின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.