LOADING

Type to search

உலக அரசியல்

பிலிப்பைன்ஸ் நாட்டில் ரிக்டர் 6.9 அளவில் பயங்கர நிலநடுக்கம்

Share

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதிகளில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் சரிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தின் மையமானது லெய்டே பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 10.4 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.