LOADING

Type to search

இலங்கை அரசியல்

செம்மணியில் சேதப்படுத்தப்பட்ட அணையா விளக்கு தூபியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

Share

செம்மணியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு தூபி விசமிகளால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டிருந்தது.

செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. அதன்விளைவாக அணையாவிளக்கு தூபியும் அமைக்கப்பட்டது.

சேதப்படுத்தும் பட்ட இவ் அணையா விளக்கு தூபியை மீண்டும் புனரமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.