LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் – அராலியில் கிணற்றில் தவறி விழுந்த வயோதிப பெண் உயிரிழப்பு!

Share

பு.கஜிந்தன்

கடந்த 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் தவறி கிணற்றில் விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த அரியகுட்டி புவனேஸ்வரி (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக முயற்சித்தவேளை கால் தவறி கிணற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தினர்.