Historic investment in Durham Region for $3 billion partnership between the Federal and Ontario governments to build Canada’s first small modular Reactors
Share
டார்லிங்டன் நகரத்தில் கனடாவின் முதல் சிறிய அணுமின் நிலையத்தை அமைக்க கனடாவின் மத்திய மற்றும் ஒன்ராறியோ அரசாங்கங்கள் கூட்டாக முதலிட்டுள்ளன
23-10-2025 வியாழக்கிழமை அன்று கனடிய , பிரதமர் மார்க் கார்னி மற்றும் ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் ஆகியோர் டர்ஹாம் பிராந்தியத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீட்டை அறிவித்தபோது, அவருடன் எமது தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினரான யுனிற்றா நாதன் அவர்களும் கலந்து கொண்டார் .: டார்லிங்டன் நகரத்தில் கனடாவின் முதல் சிறிய மட்டு அணுமின் உலைகளை உருவாக்க மத்திய மற்றும் ஒன்ராறியோ அரசாங்கங்கள் $3 பில்லியன் முதலீடு ஒன்றில் இணைந்துள்ளன

இந்த திட்டம் தொடர்பாக தனது செய்திக்குறிப்பில் எழுதியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன் அவர்கள்”இந்தத் திட்டத்தின் பிரகாரம் 18,000 கட்டுமான தொழில் வாய்ப்பு மற்றும் 3,700 நிரந்தர தொழில்களைத் தரவல்ல பலன் கிடைக்கும் அத்துடன் ஒன்ராறியோவின் சுத்தமான எரிசக்தித் திட்டத்தையும் வலுப்படுத்தும், மேலும் இந்த அடுத்த தலைமுறை அணு தொழில்நுட்பத்தை உருவாக்கும் முதல் G7 நாடாக கனடாவை மாற்றும். புதுமை நமது எரிசக்தி எதிர்காலத்தை இயக்குவதன் மூலம், டர்ஹாம் வலுவான, தூய்மையான மற்றும் நிலையான கனடாவை உருவாக்குவதில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது” என்றார்




















