சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சித்தார்த்தன் போன்றவர்கள் ‘நம்பகத்தன்மையற்றவர்கள்
Share
இருவரும் பதவிகளைப் பெற எமது பெறுவதே நோக்கமாகக் கொண்டவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது பதவிகளைபெற எமது உதவிகளைப் பெற்று செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் 13 ஆம் திருத்தம் சம்பந்தமாக கூட்டங்கள் வைப்பது தாங்களாக ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றம்.
என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கூட்டத்தை நடத்தியது தமிழ் கட்சிகள் அல்ல, அது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியே நடாத்தியது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிகள் கூடி மாகாண சபையை வைக்க வேண்டும் என்பது தொடர்பிலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தொடர்பிலும. கதைத்துள்ளனர். நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் மிகத் தெளிவாக ஒற்றையாட்சி முறைமைக்குள் தமிழ் அரசியல் நடாத்த அறவே இடமில்லை என்பதனை எழுத்து மூலமாக தெளிவாக வலியுத்தி வந்தனாங்கள். அது மட்டுமன்றி 13 ஆம் திருத்தம் இறுதி தீர்வும் அல்ல ஏக்கியராச்சி யோசணையை நிராகரிக்கப்பட வேண்டும் என்ற இரண்டும் ஒப்பந்தத்தில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் அனைவரும் ஒப்பமிட்டனர். அதற்குப் பிறகு உள்ளூராட்சி சபையில் எங்களோடு இணைந்து நாங்கள் விட்டுக் கொடுப்புகளை செய்து அவர்களிற்கு பதவிகளை கொடுத்த பின்பு நன்மைகளை பெற்ற பிறகு, எம்மோடு ஒப்பந்தம் செய்திருக்காது விட்டால் அவர்கள் எந்தவொரு சபையிலும் பதவிகளை எடுத்திருக்க முடியாது தவிசாளர் பதவிகளையும் பெற்றிருக்க முடியாது. அப்படி பதவிகளைபெற எமது உதவிகளைப் பெற்று செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் அவர்கள் இந்த நேரத்தில் 13 ஆம் திருத்தம் சம்பந்தமாக கூட்டங்கள் வைப்பது தாங்களாக ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றம்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுடன் ஒரு மாதங்களின் முன்பதாக நான் வெளிநாடுகளிற்கு பயணிப்பதற்கு முதல் அதாவது 13 ஆம் திருத்தம. தொடர்பில் அவர்கள் திருகோணமலையில் நடாத்திய சந்திப்பிற்கு முன்பே தெளிவாக இந்த விடயத்தை 13 ஆம் திருத்த விடயத்தில் ஈடுபட்டால் ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகவே நாம் பார்ப்போம் என்பதை நாம் அவர்களிடம் சொல்லியிருந்தோம். சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சித்தார்த்தன் போன்றவர்கள் ‘நம்பகத்தன்மையற்றவர்கள். இருவரும் பதவிகளைப் பெற எமது பெறுவதே நோக்கமாகக் கொண்டவர்கள் என்றார்.




















