LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் பிறப்பிலேயே அங்கங்களின் செயற்பாடுகள் அற்ற ஒருவர் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

Share

யாழ்ப்பாணத்தில் 22ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் மின்சாரம் தாக்கி ஆணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த புவனேந்திரன் தேவபாலன் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு பிறப்பிலேயே கை, கால்கள் என்பன செயற்பாடுகள் அற்று காணப்படுகின்றன. இன்று காலை 10 மணியளவில் தனது வாயினால் மின்சார ஆழி குதையினுள் மின் இணைப்புக்காக வயரினை செருக முற்படும்போது அவர்மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.