LOADING

Type to search

இந்திய அரசியல்

திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Share

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலையத்தில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பொள்ளாச்சி மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஒன் டு ஒன் முறையில் இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையின்போது தொகுதியில் கட்சி செயல்பாடுகள், கள நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 31 நாட்களில் 69 சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.