PARAGON Security Ltd. in Toronto, recognizes a Dedicated and Long- Standing Security Offier Mr.Kathir Thuraisingam
Share
ரொறன்ரோவின் PARAGON Security Ltd பாதுகாப்பு நிறுவனம் அங்கு நீண்ட காலம் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றிய கதிர் துரைசிங்கம் சேவையை கௌரவித்தது
கனடாவில் 38 வருடங்கள் பாதுகாப்பு உத்தியோகத்தராக பல நிறுவனங்களில் பணியாற்றியும் அதில் 15 வருடங்களை PARAGON Security Inc. பாதுகாப்பு சேவை நிறுவனத்திலும் பணியாற்றியமைக்காக கடந்த ஒக்டோபர் 24ம் திகதி அங்கு நீண்ட காலம் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றிய கதிர் துரைசிங்கம் அவர்களின் சேவையையும் அவரது அர்ப்பணிப்பான கடமையுணர்வையும் பாராட்டிக் கௌரவித்தது.
கதிர் துரைசிங்கம் அவர்கள் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் பயின்று உதவி வைத்திய அதிகாரியாக (RMP) இலங்கையிலும் நைஜீரியாவிலும் பணியாற்றி பின்னர் கனடாவில் குடியேறி கடந்த 38 வருடங்களாக வசித்து வருகின்றார்.
இந்த காலப்பகுதியில் ஒரு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றத் தொடங்கி தொடர்ச்சியாக 38 வருடங்கள் அந்த பணியை அர்ப்பணிப்புடன் ஆற்றியவராய் அண்மையில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
எனினும் அவரது தொடர்ச்சியான சேவை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக இந்த கௌரவம் வழங்கப்பெற்றது.
கதிர் துரைசிங்கம் அவர்கள் கனடாவில் கலை. இலக்கியம். மற்றும் நாடகம் அத்துடன் மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வளர்ச்சி ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு நூற்றுக்கணக்கான நண்பர்களை சம்பாதித்துக் கொண்டவர் என்பதும்குறிப்பிடத்தக்கது. கனடா உதயன் மற்றும் தாய்வீடு பத்திரிகைகளில் தனது படைப்புக்களை வாசகர்களுக்காக அளித்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இங்கே காணப்பெறும் படங்களில் கதிர் துரைசிங்கம் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஆகியவற்றை வழங்கிய திரு சிவா மகேந்திரன்( Director Client Service ) உட்பட சில உயர் அதிகாரிகளும் காணப்பெறுகின்றனர்




















