A well-known ‘PATHWAY TO WELLENESS CLINIC’s new location Opening Ceremony was a successful one
Share
ரொறன்ரோ வாழ் மக்களால் நன்கு அறியப்பெற்ற ‘PATHWAY TO WELLENESS CLINIC நிலையத்தின் புதிய சிகிச்சை நிலையத் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
கடந்த பல வருடங்களாக கென்னடி-பின்ச் சந்திப்பிற்கு அருகில் இயங்கிவந்த, ரொறன்ரோ வாழ் மக்களால் நன்கு அறியப்பெற்றதும் டாக்டர் நெலன்ரைன் யேசுதாசன் அவர்களை தலைமை வைத்தியராகக் கொண்டதுமான ‘PATHWAY TO WELLENESS CLINIC நிலையத்தின் புதிய சிகிச்சை நிலையத் திறப்பு விழா கடந்த 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மார்க்கம் நகரில் சிறப்பாக நடைபெற்றது.

7595 Markham Road Unit 19 Markham -L3S 0B6 என்னும் விலாசத்தில் அமைந்து சிகிச்சை வளாகத்தின்
திறப்பு விழாவிற்கு மார்க்கம்-தோர்ன்ஹில் தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டார்.

விசேட விருந்தினராக மார்க்கம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மா அவர்களின் பிரதிநிதியான Deepak Talreja அவர்களும் கலந்து கொண்டார். அழைக்கப்பெற்ற பல நண்பர்கள் – வாடிக்கையாளர்கள்- வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என சிகிச்சை வழங்கும் வளாகம் அன்று விருந்தினர்களால் நிறைந்து காணப்பெற்றது.
டாக்டர் நெலன்ரைன் யேசுதாசன் அவர்களும் அவரது துணைவியாரும் இணைந்து தொடர்ந்து வசதியான ஒரு இடத்தில் அவர்களது சிகிச்சை நிலையத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என அனைவரும் வாழத்திச் சென்றனர்.

வாழ்த்துத் தெரிவிக்க விரும்புவோர் 437 349 8404 என்னும் இலக்கத்தை அழைக்கவும்.




















