LOADING

Type to search

உலக அரசியல்

பாகிஸ்தான்: 20 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்புப்படையினர் அதிரடி

Share

பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாதுகாப்புப்படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேவேளை, பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துங்குவா மாகாணம் வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் நேற்று அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்புப்படையினர் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.